Header Ads

உலக சுகாதார தாபனம் வௌியிட்டுள்ள அறிவிப்பு

சரியான பொது சுகாதார நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டதன் பின்னர், மெதுமெதுவாக தற்போதுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் அறிவுறுத்தியுள்ளது.

அதன் பணிப்பாளர் டெட்ரோய் அதானொம் இதனைக் கூறியுள்ளார்.

குறிப்பாக நபர்களை அடையாளம் கண்டு அவர்களை கண்டுபிடிப்பதற்கான முறைமைகள் அவசியம் இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொவிட்-19 நோய் வேகமாக பரவிய போதிலும், அதன் வீழ்ச்சி வேகம் குறைவாகவே இருக்கிறது.

எனவே தற்போது நாடுகளில் அமுலில் இருக்கின்ற கட்டுப்பாட்டு முறைமைகள், படிப்படியாக மெதுவாக குறைக்கப்பட வேண்டுமே தவர, ஒரேடியாக நீக்கப்படக்கூடாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.