Header Ads

​கொரோனா தொற்றுக்கான புதிய அறிகுறிகள்

கொரோனா வைரஸ் தொற்றின் புதிய அறிகுறிகளாக கால்களில் கொப்புளங்கள் போன்றவை ஏற்படும் என அவுஸ்திரேலிய மெல்பன் வெஸ்டன் மருத்துவமனையின் நரம்பியல் பிரிவின் பிரதானியாக பணியாற்றும் இலங்கையின் மருத்துவ பேராசியரியர் திஸ்ஸ விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

கொவிட்-19 வைரஸ் தொற்றை வெளிப்படுத்தும் மற்றுமொரு அறிகுறி கால்களின் மூலம் அறியப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்பெய்னில் கால்கள் தொடர்பான நிபுணர்களின் தேசிய கூட்டத்தில் இது தொடர்பான முதலாவது அறிக்கை வெளியிடப்பட்டது.

இதற்கமைய, குழந்தைகள், சிறுவர்கள், இளைஞர், யுவதிகள் மற்றும் சில சந்தர்ப்பங்களில் முதியவர்களுக்கும், கொவிட்-19 தொற்று அறிகுறியாக கொப்புளங்கள் போன்றவை இந்த நோயாளர்களிடம் அவதானிக்க முடியும்.

இது எண்ணிக்கை அடிப்படையில் ஒவ்வொரு நோயாளிகளுக்கு உள்ளதாக குறிப்பிடப்பட்டதே தவிர, விகிதாசார அடிப்படையிலான அறிகுறிகள் என ஸ்பெய்ன் நிபுணர்களினால் வெளிப்படுத்தவில்லை என இலங்கையின் மருத்துவ பேராசியரியர் திஸ்ஸ விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.