Header Ads

14 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 14 வயது சிறுவன்

மட்டக்களப்பு பிரதேசத்தில் 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட 14 வயது சிறுவன் ஒருவனை நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) கைது செய்துள்ளதாகவும் சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.


குறித்த பிரதேசத்திலுள்ள மருமகள் முறையிலான சிறுமியை அதே பிரதேசத்தைச் சோந்த 14 சிறுவன் காதலித்து வந்துள்ளதாகவும், சம்பவதினமான சனிக்கிழமை பகல் 12 மணியளவில் கிரான்வேம்பு பகுதியிலுள்ள சிறுவனின் சகோரனின்  வீட்டிற்கு சிறுமியை அழைத்துச் சென்று அங்கு பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிசாரின் ஆரம்ப விசாரனையில் தெரியவந்துள்ளது தெரிவித்தனர் 

இதனையடுத்து குறித்த சிறுமி உறவினரிடம் தெரிவித்ததையடுத்து காவல் நிலையத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) முறைப்பாடு செய்துள்ள நிலையில் குறித்த சிறுவனை பொலிசார்  கைது செய்துள்ளனர்.

அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட சிறுவனை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.