Header Ads

கொரோனா தொற்றாளரின் உடல் புதைக்கப்பட்டதா? புதிய சர்ச்​சை

கொரோனா வைரஸினால் பீடிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த நபரது உடல் தனிமைப்படுத்தும் சட்டத்திற்கு முரணாக நபரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டதாக கூறப்படும் விவகாரம் குறித்து சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருக்கிறது.


அகில இலங்கை மருத்துவர்கள் சங்கம் இந்த முறைப்பாட்டை வழங்கியுள்ளது.

கொழும்பு ஸ்ரீஜயவர்தனபுர வைத்தியசாலையில் 80 வயது நபர் 18ஆம் இலக்க வார்ட்டு அறையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்துள்ளார்.

பி.சி.ஆர் இயந்திரம் ஊடாக அவர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட முதலாவது நபராவார். இந்நிலையில் பரிசோதனையில் குறித்த நபருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது.

கடந்த 27ஆம் திகதி அவர் மரணித்ததை அடுத்து தனிமைப்படுத்தும் சட்டத்திற்கு முரணாக உடலை உறவினர்கள் பெற்று நல்லடக்கம் செய்திருக்கின்றமை குறித்து சுகாதார அமைச்சரின் கவனத்திற்கு சென்றுள்ளது.

No comments

Powered by Blogger.