இலங்கையில் கொரோனா தொற்றால் குணமடைந்தவருக்கு மீண்டும் கொரோனா
கொரோனா நோயில் இருந்து மீண்டு ஏப்ரல் 17 ஆம் திகதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட ஜா-எல பிரதேசத்தைச் சேர்ந்த 67 வயது நோயாளி ஒருவருக்கு மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
இவர் மார்ச் 17 அன்று முதன் முதலில் ஐ.டி.எச் மருத்துவமனையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஏப்ரல் 17 ஆம் தேதி முழுமையாக குணமடைந்த பின்னர் அவர் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
பின்னர் திடீரென மீண்டும் மார்பு வலி ஏற்பட்டபோது அவர் வீட்டில் சுய தனிமைப்படுத்தலில் இருந்துள்ளதுடன், நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு மீண்டும் கோவிட்19 பாசிட்டிவ் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக ஐ.டி.எச் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Post a Comment