Header Ads

பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டியது என்ன? இராணுவத் தளபதியின் விளக்கம்

எதிர்வரும் வாரத்தில் மக்கள் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகாமல் இருப்பதற்கான அனைத்து செயற்பாடுகறையும் பொறுப்புடன் உணர்ந்து செய்ய வேண்டியது அவசியம் என இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


அதேபோல, காவல்துறை உள்ளிட்ட முப்படையினரும் அவர்களது கடமைகளை செய்து வரும் நிலையில் பொதுமக்கள் அவர்களுக்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டுமெனவும் அவர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்திற்கொண்டு நாளை முதல் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் சில வரையறைகளுடன் திறக்கப்படவுள்ளன.

இதன் போது பாதுகாப்புத்துறையினர் மற்றும் சுகாதாரத்துறையினரால் நிறுவனப் பிரதானிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு ஆலோசனைகள் நிச்சயமாக பின்பற்றப்பட வேண்டும் என்று இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

அவ்வாறு அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் பின்பற்றப்பட வேண்டிய சுகாதார நடைமுறைகள் பற்றி விசேட ஆலோசனை சுற்றறிக்கைகளும் வழங்கப்பட்டுள்ளன. சமூக இடைவெளியைப் பேணுவது பற்றியும் போக்குவரத்து ஏற்பாடுகள் பற்றியும் திட்டமிட்டு செயற்படுவர் என்றும் எதிர்பார்க்கின்றோம். எம்மால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளுக்கு அமையவே இவர்கள் செயற்பட வேண்டும்.

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் சமூக இடைவெளியைப் பேணும் நோக்கில் தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்திற்கமைய அத்தியாவசிய தேவைகளுக்காகச் செல்ல முடியும். ஏனைய மாவட்டங்களில் வழமை போன்று அன்றாட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்திற்கொண்டு நாளை முதல் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் சில வரையறைகளுடன் திறக்கப்படவுள்ளன.

இதன் போது பாதுகாப்புத்துறையினர் மற்றும் சுகாதாரத்துறையினரால் நிறுவனப் பிரதானிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு ஆலோசனைகள் நிச்சயமாக பின்பற்றப்பட வேண்டும் என்று இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

அவ்வாறு அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் பின்பற்றப்பட வேண்டிய சுகாதார நடைமுறைகள் பற்றி விசேட ஆலோசனை சுற்றறிக்கைகளும் வழங்கப்பட்டுள்ளன.

சமூக இடைவெளியைப் பேணுவது பற்றியும் போக்குவரத்து ஏற்பாடுகள் பற்றியும் திட்டமிட்டு செயற்படுவர் என்றும் எதிர்பார்க்கின்றோம். எம்மால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளுக்கு அமையவே இவர்கள் செயற்பட வேண்டும்.

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் சமூக இடைவெளியைப் பேணும் நோக்கில் தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்திற்கமைய அத்தியாவசிய தேவைகளுக்காகச் செல்ல முடியும். ஏனைய மாவட்டங்களில் வழமை போன்று அன்றாட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.