Header Ads

தகாத உறவு மூலம் குழந்தை பெற்று கொலை செய்து வீசிய தாய்

புத்தூர் கிழக்கு பகுதியில் திருட்டுத்தனமாக பெற்ற குழந்தையை மலசலகூட குழிக்குள் வீசிய பெண்ணை அச்சுவேலி பொலிஸார் கைது செய்துள்ளனர். 


குறித்த பிரதேசத்திற்கு பொறுப்பான கிராமசேவையாளர் வழங்கிய தகவலுக்கு அமைய குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இன்றையதினம் மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் ஆனந்தராஜா முன்னிலையில் சடலம் மீட்கப்பட்டது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் உருத்திராபதி மயூரதன் முன்னிலையில் சடலம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது.

கணவனை இழந்த நிலையில் மேற்படி பெண் தகாத உறவின் மூலம் குழந்தை ஒன்றினை பிரசவித்துள்ளார்.

அதனை கொலை செய்து தனது வீட்டு மலசலகூட குழியில் வீசியதாக முதல் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

குகராஜா நடராஜா

No comments

Powered by Blogger.