ஹெரோயின் கைப்பொம்மை - வித்தியாசமாக சிந்தித்து சிக்கிய தம்பதி
குழந்தையின் கைப்பொம்மை ஒன்றிற்குள் மறைத்து வைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட தம்பதியொன்றை தம்புள்ளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தம்புள்ளை-ரத்மல்கஹ எல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வைத்தே குறித்த போதைப்பொருள் வியாபாரம் இடம்பெற்று வந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதன்போது, குறித்த தம்பதிகளிடமிருந்து போதைப்பொருளை கொள்வனவு செய்வதற்காக வருகைத் தந்திருந்த நான்கு சந்தேக நபர்களையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதன்போது சிறிய கைப்பொம்மைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3.400 மில்லிகிராம் ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறையினர் மேலும் குறிப்பிட்டனர்.
கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப்பொருளின் பெறுமதி சுமார் ஒரு இலட்சம் என்பதோடு கைது செய்யப்பட்ட குறித்த தம்பதியினர் உள்ளிட்ட சந்தேக நபர்களை இன்று (09) தம்புள்ளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment