Header Ads

இலங்கை அணியின் முன்னணி பந்துவீச்சாளர் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது

இலங்கை கிரிக்கட் அணியின் பிரபல பந்து வீச்சாளர் ஒருவர் ஹெரோயின் போதை பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.


இலங்கை கிரிக்கட் அணியின் பந்து வீச்சாளர் செஹான் மதுசங்கவிடமே போதை பொருள் மீட்கப்பட்டுள்ளது.

குருநாகல் – பன்னல என்கிற பிரதேசத்தில் வைத்து அவர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.

இதற்கமைய அவரிடமிருந்து 2 கிராம் 700 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இலங்கை அணியின் பிரபல பந்துவீச்சாளர் செஹான் மதுசங்கவை நீதிமன்றில் முன்னிலைபடுத்திய பின்னர் அவரை எதிர்வரும் 02 ஆம் திகதி- வரை விளக்கமறியலில் வைக்குமாறு குளியாப்பிட்டிய நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இவர் விளையாடிய முதலாவது கிரிக்கெட் போட்டியில் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.