Header Ads

யாழ்ப்பாணம் தனிமைப்படுத்தல் முகாமில் பெண் ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் - கொடிகாமம் தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்த வயோதிப பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.


அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக நேற்றைய தினம் உயிரிழந்ததாக யாழ்ப்பாண மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

உயிரிழந்தவர் பண்டாரநாயக்க மாவத்தையை சேர்ந்தவர் என குறிப்பிடப்படுகிறது.

இந்தநிலையில் அவர் கொரோனா தொற்றினால் உயிரிழக்கவில்லை என மருத்து பரிசோதனைகளில் தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

குறித்த வயோதிப பெண்ணிற்கு இருதய நோய் மற்றும் சீரநீரக செயலழிப்பு ஆகிய நோய் காணப்பட்டதால் இவ்வாறு மரணித்துள்ளதாகவும் யாழ்ப்பாண மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.