ஜனாசா எரிப்புக்கு எதிராக சிங்கள ஒருவர் வழக்குத் தாக்கல்
கொரோனா வைரஸினால் உயிரிழந்த முஸ்லிம் நபர்களின் உடல்கள் எரிக்கப்பட்டதற்கு எதிரான உச்ச நீதிமன்றில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் பொதுதேர்தல் வேட்பாளரான ஓசல ஹேரத் என்பவரால் இந்த அடிப்படை மனித உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டது.
சுகாதார அமைச்சர், சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம், அமைச்சின் செயலாளர், சட்டமா அதிபர் ஆகியோர் மனுவில் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இது சம்பந்தமாக முஸ்லிம் தரப்புக்களால் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், அதில் தமிழரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆஜராக உள்ளார்.
அவர் இந்த வழக்கில் ஆஜராகுவதற்கு எவ்வித கட்டணங்களும் அறவிடுவதில்லை என்று கூறியிருந்த நிலையில், அவரது ஜூனியர்ஸ் சட்டத்தரணிகளும் தமக்கு எவ்வித கொடுப்பனவும் வேண்டாம் என்று தற்போது அறிவித்துள்ளனர்.
உயிரிழந்த முஸ்லிம்கள் பலரது ஜனாசாக்கள் எரிக்கப்பட்டும் எந்தவொரு முஸ்லிம் அரசியல் தரப்பினராலும் சட்ட நடவடிக்கை இதுவரை எடுக்காத நிலையில், மாற்றுமத சகோதரர்களே இதற்கு முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment