Header Ads

அஜித் ரோஹணவின் மகளை சிறப்பு விமானததில் அழைத்து வந்த தெரண டிவி உரிமையாளர்

டுபாயில் கொரோனா வைரஸ் நெருக்கடியினால் சிக்கித்தவித்த பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹணவின் மகளை அழைத்துவர தெரண தொலைக்காட்சியின் உரிமையாளர் திலித் ஜயவீர உதவியுள்ள விவகாரம் பெரும் பேசுபொருளாக மாறிவிட்டது.

வெளிநாடுகளில் நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இலங்கையரை அழைத்துவர தொழிலதிபர் திலித் ஜயவீர, 2.2 கோடி ரூபாவை வழங்குவதாகவும், அதனூடாக இலங்கையர்களுக்கு இலவச விமானச் சீட்டுக்களைப் பெறமுடியும் எனவும் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த வசதியின் ஊடாக சிறப்பு விமானம் ஒன்றில் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹணவின் மகள் எவ்வித பிரச்சினையும் இன்றி இலங்கையை வந்தடைந்ததாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன.

டுபாய் நாட்டில் சிக்கியிருந்த 197 இலங்கையர்கள் அண்மையில் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.