ஈஸ்டர் தக்குதல் - இன்று நீதவான் முன்னிலையில் சாட்சியமளித்த சிறுவர்கள் வௌியிட்ட அதிர்ச்சி தகவல்கள்
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் சம்பந்தமாக 17 வயதுக்கு குறைந்த இரண்டு சிறுவர்கள் இன்று நீதிமன்றில் சாட்சியமளித்தனர்.
இதன்போது குறித்த இரண்டு சிறுவர்களும் மத்ரசா பள்ளிக்கூடங்களில் ஆயுதப் பயிற்சி சார்ந்த கற்றல்கள் இடம்பெற்றதாக சாட்சியம் அளித்துள்ளனர்.
கொழும்பு கோட்டை நீதிமன்ற நீதவான் ரங்க திசாநாயக்க முன்பாக குறித்த இருவரும் இரகசிய பொலிஸாரினால் இன்று ஆஜர் செய்யப்பட்டனர்.
இதன்போது சுமார் ஒரு மணித்தியாலத்திற்கும் மேற்பட்ட காலம் இவர்கள் இருவரும் நீதவான் முன்னிலையில் சாட்சியமளித்தனர்.
தமக்கு ஆயுதப் பயிற்சி வழங்கப்பட்டமை மற்றும் கற்றல் நடவடிக்கைகள் இடம்பெற்ற விதம் குறித்த இரண்டு சிறுவர்களும் சாட்சியமளித்துள்ளனர்.
இந்த மத்ரசாவை நடத்திச் சென்ற அரச சார்பற்ற நிறுவனத்தின் பிரதான பதவிகளை வகித்தவர்கள் கடந்த ஏப்ரல் தாக்குதலை நடத்திய தற்கொலைதாரிகள் என்று விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
அந்த நிறுவனத்தின் செயலாளர் மற்றும் பொருளாலர் பதவிகளை சங்கரீலா மற்றும் சின்னமன் ஹோட்டல்களில் குண்டுதாக்குதலை நடத்திய இருவரும் வகித்துள்ளனர்.
இந்த மத்ரசாவில் சாய்ந்தமருது வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த ஸஹ்ரானின் சகோதரன் ரில்வானினால் விரிவுரைகள் நடத்தப்பட்டு வந்துள்ளது.
அதேநேரம் அந்த மத்ரசாவின் அதிபராக அண்மையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் செயற்பட்டு வந்ததாக இரண்டு சிறுவர்களும் சாட்சியமளித்துள்ளனர்.

Post a Comment