நேற்று மஹிந்தவை சந்தித்த சுமந்திரனிடம் மஹிந்த கூறியுள்ள விடயம்
அதிகாரத்தை பகிரும் வகையில் கோட்டா-மஹிந்த அரசின் புதிய அரசியலமைப்பு அமைந்தால் அதற்கு ஆதரவு அளிக்க தயார் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும், கூட்டமைப்பின் பேச்சாளராக முன்னாள் எம்.பி சுமந்திரனுக்கும் இடையே நேற்று செவ்வாய்க்கிழமை மாலை கொழும்பில் சந்திப்பு நடந்தது.இச் சந்திப்பை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே சுமந்திரன் மேற்கண்டவாறு கூறினார்.
இதேவேளை, பொதுத்தேர்தலின் பின் புதிய அரசியல் யாப்பு ஒன்றை உருவாக்குவதாகவும், அதற்கு கூட்டமைப்பின் ஆதரவு அவசியம் என்றும் இந்த சந்திப்பில் சுமந்திரனிடம் பிரதமர் கோரியமை சுட்டிக்காட்டத்தக்கது.
கொழும்பு 7 விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற குறித்த சந்திப்பின் போது, அரசியல் கைதிகள் தொடர்பிலான ஆவணங்களையும் எம்.ஏ.சுமந்திரன் பிரதமரிடம் கையளித்தார்.

Post a Comment