Header Ads

இன்று மாலை இரண்டு சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழப்பு - சம்மாந்துறையில் சோக சம்பவம்

சம்மாந்துறையில் இரண்டு சிறுவர்கள் கொட்டு பதிக்கப்பட்ட கிணற்றில் தவறி விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.


இன்று (9) மாலை 05.45 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்மாந்துறை Block J கிழக்கு -03 பகுதியில் 6 வயது மற்றும் 3 வயது மதிக்கதக்க இரு சிறுவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

சகோதரர்களான இரு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரழந்தவர்களது சடலம் பிரேத பரிசோதனைக்காக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

No comments

Powered by Blogger.