ஹெரோயினுடன் கைதான இலங்கை அணி வீரருக்கு ஏற்பட்ட நிலை
ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டின்பேரில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீரர் செஹான் மதுஷங்கவை எதிர்வரும் ஜூன் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேவேளை ஷெஹான் மதுஷங்க அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் இடைநீக்கம் செய்யப்படுவதாக ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனம் அறிவித்துள்ளது.இவரிடம் இருந்து 2.7 கிராம் ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டது. இவர் இலங்கையின் கிரிக்கெட் அணியில் 2018ஆம் ஆண்டு இணைந்தார்.
வலது கை பந்துவீச்சாளரான இவர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஒன்றில் பங்களாதேஸ் அணிக்கு எதிராக ஹெட்ரிக் சாதனையை நிலைநாட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment