கொழும்பு, கம்பஹாவில் ஊரடங்கு நீடிப்பு ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அறிவிப்பு
இன்றிரவு 8 மணிமுதல் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 5 மணிவரை நாடுமுழுவதும் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படவுள்ளது.
கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் நேற்றிரவு 8 மணிக்கு அமுலாக்கப்பட்ட ஊரடங்கு சட்டம் இன்று அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்பட்டது.
இந்த நிலையில், இன்றிரவு 8 மணிமுதல் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 5 மணிவரை நாடுமுழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்படவுள்ளது.
கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் எதிர்வரும் 18 ஆம் திகதி அதிகாலை 5 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர், எதிர்வரும் 23 ஆம் திகதிவரை நாளாந்தம் இரவு 8 மணிமுதல் அதிகாலை 5 மணிவரை ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் உள்ள நிலையில், கடந்த 11 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இயல்பு வாழ்க்கையை மீள ஆரம்பிக்கும் பணிகள் இன்று வரை தொடர்கிறது.
இந்த நிலையில், எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் மறு அறிவித்தல் வரை அந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Post a Comment