மீண்டும் திறக்கப்பட்ட அக்குறனை மற்றும் பேருவளை பிரதேசங்கள்
கண்டி மாவட்டத்தில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில் களுத்துறை மாவட்டத்தின் பேருவளை பிரதேசமும் திறக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த பிரதேசங்களில் வைரஸ் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளமையினால் இன்று முதல் அந்த பிரதேசங்களில் பொதுவான ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவ தளபதி இதனை தெரிவித்துள்ளார்.
அதற்கமைய குறித்த பகுதிகளில் இன்று முதல் மக்கள் நடமாட்டத்துக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு தளர்த்தப்படவுள்ளது.

Post a Comment