Header Ads

திருகோணமலையில் உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா

அண்மையில் குவைட்டிலிருந்து நாடு திரும்பிய பெண் ஒருவர் திருகோணமலையில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று திங்கட்கிழமை அதிகாலை உயிரிழந்துள்ளார்.


திருகோணமலை வைத்தியசாலையில் இன்று அதிமதிக்கப்பட்ட நிலையில் இவ்வாறு மரணித்த பெண், களுத்துறை – பயாகல பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதுடையவர் என்று வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதனையடுத்து நடத்தப்பட்ட பரிசோதனையில் அந்தப் பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைத்தியர் அனில் ஜாசிங்க இதனைக் கூறியுள்ளார்.

அதன்படி இலங்கையில் இதுவரை கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 21 திகதி குவைத்திலிருந்து நாடு திரும்பி 162 நபர்களை மங்கி பிரிட்ஜ் இராணுவ முகாமில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியிருந்த நிலையில் இம்மரணம் இடம்பெற்றுள்ளது .

இதேவேளை இந்தப் பெண் தனிமைப்படுத்தலில் ஈடுபட்டிருந்த திருகோணமலை மங்கி பிரிட்ஜ் இராணுவ முகாமிலிருந்த இரண்டு பெண்களுக்கு நேற்று கொரோனா தொற்று ஏற்பட்டமை உறுதிசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.