Header Ads

மேல் மாகாணத்தில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டில்

மேல் மாகாணத்தில் கொரோனா வைரஸ் பரவலானது தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.


குறித்த வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதில் சுகாதார சேவைகள் பிரிவினர் சிறப்பான முறையில் ஈடுபட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், மே 4ஆம் திகதி நாடளாவிய ரீதியில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படுவது தொடர்பில் தற்போது கூறமுடியாதுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

வெசாக் உற்சவ நாட்களில் மிகவும் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டியது அவசியம் என்பதோடு அதனைத் தொடரந்து வரும் நாட்களும் சுகாதார துறையினர் வழங்கும் ஆலோசனையின் படி மக்கள் செயற்படுவது அவசியம் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.