Header Ads

ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்

கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக ஸ்தம்பிதமடைந்திருந்த நாடு மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பினாலும், வைரஸ் பரவலானது மீண்டும் ஏற்படாதிருக்க மக்கள் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றி செயற்படுவது அவசியம் என பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இல்லையெனில், மீண்டும் நாட்டுக்குள் கொவிட் 19 வைரஸ் பரவல் அதிகரிக்கும் ஆபத்து இருப்பதாகவும் குறித்த சங்கம் எச்சரித்துள்ளது.

கொழும்பு, கம்பஹா தவர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கான ஊரடங்கு உத்தரவு நேற்றைய தினம் தளர்த்தப்பட்டது.

எவ்வாறாயினும் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் மீண்டும் பகுதியளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் ஒன்று கூடி உணவு உண்பதை தவிர்க்க வேண்டுமெனவும் குறித்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.