அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறார் மைத்திரிபால சிறிசேன
அரசியலமைப்பு திருத்தம் மேற்கொள்ள முடியாது போனால் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போட்டியிடுவார் என அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஏனைய கட்சிகளுக்கு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்குறிய வேட்பாளர் இல்லாததன் காரணமாகவே மைத்திரிபால சிறிசேன பொது வேட்பாளராக களமிறங்கியதாகவும் இந்த ஜனாதிபதி இன்றி அரசாங்கம் அமைக்க முடியும் என்று யாராவது கூறுவார்களாயின் அதுதொடர்பில் தாம் கவனம் செலுத்துவோம் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த நிறைவேற்று அதிகாரத்தின் பிரதிபலனை அனுபவிக்க தெரியாமல் இல்லை என்றும் அதனை தவறான முறையில் பயன்படுத்தாமல் இருப்பதையே தற்போது தான் செய்வதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment