Header Ads

வேட்புமனு நிராகரிப்பு தொடர்பிலான மனு தள்ளுபடி


கொழும்பு மாநகர சபைத் தேர்தலுக்காக, தாம் தாக்கல் செய்த வேட்பு மனுப் பட்டியல் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக, தேசிய மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 

தமது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டமை சட்டவிரோதமானது எனவும், குறித்த வேட்பு மனுவை மீள பொறுப்பேற்குமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு உத்தரவிடுமாறும் கோரி, அவர்கள் இந்த மனுவை தாக்கல் செய்தமை குறிப்பிடத்தக்கது. 

அத்துடன், இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் வரை, கொழும்பு மாநகர சபைக்கான தேர்தலை நடத்த இடைக்கால தடை விதிக்குமாறும் மனுதாரர்கள் கோரியிருந்தனர்.

No comments

Powered by Blogger.