பொதுஜன பெரமுனவுக்கு 05ம் திகதி வரை அவகாசம் வழங்கியுள்ள மைத்திரியின் கட்சி
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் அரசியல் கூட்டணியை ஏற்படுத்துவது
சம்பந்தமான விடயத்தில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சின்னத்தை மாற்ற
எதிர்வரும் 5 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்குவது என ஸ்ரீலங்கா சுதந்திரக்
கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளதாக அந்த கட்சியின் பொதுச்
செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 5 ஆம் திகதிக்குள் பொதுஜன பெரமுன தனது சின்னத்தை மாற்றவில்லை எனில் அன்றைய தினம் கட்சியின் மத்திய செயற்குழு கூடி கட்சியின் தீர்மானத்தை எடுக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
நேற்றிரவு கூடிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில், பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைப்பது சம்பந்தமான உடன்பாட்டு வரைவை நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா முன்வைத்தார். இந்த வரைவு இன்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
அதேவேழள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு எதிராக செயற்பட்டு வரும் கட்சியின் 14 உள்ளூராட்சி சபை உறுப்பினர்களில் கட்சி உறுப்புரிமையை இரத்துச் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் நான்கு பேரை கட்சியில் இருந்து விலக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கட்சியின் உறுப்புரிமை இரத்துச் செய்யப்பட்டுள்ள எஸ்.பி.திஸாநாயக்க, விஜித் விஜயமுனி சொய்சா, டிலான் பெரேரா, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, ஏ.எச்.எம். பௌசி ஆகியோருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஆதரவை பெற்றுக்கொள்வதற்காக அர்ப்பணிப்பை மேற்கொள்ளுமாறு கோத்தபாய ராஜபக்ச தரப்பு எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் பதவி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கப்படும் என்று வாக்குறுதியளித்து, கூட்டணியை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுள்ளனர்.
எனினும் இது சம்பந்தமாக எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச எந்த பதிலையும் வழங்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எப்படியான யோசனையை முன்வைத்தாலும் அதிகம் நம்பிக்கை கொள்ள வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் அவரது நண்பர்கள் மற்றும் ஆலோசகர்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

Post a Comment