Header Ads

கிழக்கிலுள்ள 10 கட்சிகள் கோட்டாவுக்கு ஆதரவு




கிழக்கு மாகாணத்தில் உள்ள பத்து சிறு கட்சிகள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் ஆதரவளிக்க தீர்மானித்துள்ளன.

இன்று (சனிக்கிழமை) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் இது குறித்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

தமிழ் மக்கள் விடுதலைபுலிகள் கட்சி, மக்கள் முன்னேற்ற கட்சி, அகில இலங்கை தமிழர் மகா சபை, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, சிறி ரெலோ, ஈழ மக்கள் ஜனநாயக கட்சி, கிழக்கு மீளெழுச்சி கழகம், ஈழ புரட்சி அமைப்பு, தமிழர் சமூக ஜனநாய கட்சி, முற்போக்கு தமிழர் அமைப்பு கட்சிகளே இவ்வாறு ஆதரவு வழங்கவுள்ளன.

தமிழ் மக்களின் உரிமைகளை வலுப்படுத்தும் நோக்கிலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் இதன்போது தெரிவித்தார்.

இதேவேளை, தமிழ் மக்கள் விடுதலைபுலிகள் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஈழ மக்கள் ஜனநாயக கட்சிகள் இதற்கு முன்னரே கோட்டாவிற்கு ஆதரவு வழங்குவது குறித்த அறிவிப்பினை வெளியிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.