Header Ads

சஜித் தரப்பை உடைக்கும் மஹிந்த தரப்பு; மற்றொரு UNP பிரபலம் கோட்டாவுடன்?




ஐக்கிய தேசிய முன்னணியை உடைக்கும் செயற்பாடுகளை மஹிந்த தலைமையிலான குழுவினர் மேற்கொண்டு வருவதாக தெரிய வருகிறது.

அதற்கமைய ஐக்கிய தேசிய முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியின் தலைவர் ஒருவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணையவுள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில், உத்தியோகபூர்வ அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு ஒன்று கொழும்பில் இடம்பெறவுள்ளது.

குறித்த தலைவரின் கோரிக்கைகமைய இந்த கட்சி தாவல் இடம்பெறவுள்ளதாக அறிந்து கொள்ள முடிந்துள்ளது.

அதற்கமைய இன்று அல்லது நாளை இந்த ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

எனினும் இந்த கட்சி தாவலை நிறுத்துவதற்காக ஐக்கிய தேசிய கட்சியின் பிரதானிகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நெருக்கமான சிங்கள ஊடகம் ஒன்று இந்த செய்தியை வௌியிட்டுள்ளது.
Powered by Blogger.