Header Ads

மறைந்த தலைவர் அஷ்ரப் இருந்திருந்தால் கட்டாயம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டிருப்பார்




மறைந்த தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் உயிருடன் இருந்திருந்தால் கட்டாயம் இந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டிருப்பார் என ஜனாதிபதி வேட்பாளர்  எம்.எல்.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.


எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.எம். ஹிஸ்புல்லாஹ்வினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பொன்று வெள்ளிக்கிழமை(18) மாலை 8  மணியளவில் அக்கறைப்பற்று கடற்கரை வீதியில் அமைந்துள்ள தனியார்  மண்டபம் ஒன்றில் இடம்பெற்றது.

இதில் கருத்து தெரிவித்த அவர்

நான் ஜனாதிபதியாக வர வேண்டும் என்பதற்காக இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. மாறாக ஜனாதிபதியாக யார் வரவேண்டும் என்பதை தீர்மானிப்பதற்காகவே போட்டியிடுகின்றேன்.

குறிப்பாக பெரும்பான்மை இனத்தைச் சார்ந்த ஒருவரே ஜனாதிபதியாக வரமுடியும் என்றும் கடந்த காலங்களில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல்களின் முடிவுகளின் பிரகாரம் வெற்றிபெற்ற வாக்குகளின் வித்தியாசம் 2 தொடக்கம் 2.5 இலட்சங்களாக தான் அமைந்துள்ளது .

 எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எந்த விதமான நிபந்தனைகளும் இல்லாமல்  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எனும் இருபெரும் கட்சிகளும் ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரிப்பதென்பது முஸ்லிம் மக்களது அதிலும் குறிப்பாக வட கிழக்கை தவிர்ந்த முஸ்லிம் மக்களது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாய் இல்லை.

இதனால் தான் இந்த தேர்தலானது நெருப்பு கிடங்கு என்று தெரிந்தும் முஸ்லிம் சமூகத்திற்காய் இத்தேர்தலில் போட்டியிடுகின்றேன். இந்த தேர்தலில் யார்  ஜனாதிபதியாக வர வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக முஸ்லிம் மக்களது வாக்குகள் அமையப்பெற வேண்டும் .

குறிப்பாக மறைந்த தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள் உயிருடன் இருந்திருந்தால் கட்டாயம் அவர் இந்த தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டிருப்பார்.

Powered by Blogger.