சிலாபத்தில் விடுதி ஒன்றில் தங்கியிருந்த 13 தமிழர்கள் கைது
சிலாபம் பிரதேசத்தில் சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்த 13 பேரை சிலாபம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவர்கள் மூன்று நாட்களாக எவ்வித காரணமும் இன்றி விடுதியில் தங்கியிருந்துள்ளனர்.
இவர்கள் மீது சந்தேகம் கொண்ட விடுதி நிர்வாகிகள் நேற்று இவர்கள் குறித்து பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அவர்கள் ஒருவரை ஒருவர் அறியாதவர்கள் எனவும் நிறுவனம் ஒன்று இவர்களை வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதற்காக அழைத்து வந்து விடுதியில் தங்க வைத்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
23 முதல் 44 வயதான இந்த நபர்கள், மட்டக்களப்பு, வெல்லாவெளி, களுவாஞ்சிக்குடி, ஏறாவூர்,பளை, யாழ்ப்பாணம் மற்றும் வட்டுக்கோட்டை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் சிலாபம் பொலிஸார் கூறியுள்ளனர்.

Post a Comment