நேற்று ஆரம்பிக்கப்பட்ட சஜித்தின் காரியாலயம் மீது நேற்றே தாக்குதல்
வீரகொட்டிய, அனோதாவ பகுதியில் உள்ள ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சிக் காரியலயத்தின் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
நேற்று (23) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கட்சி காரியாலயம் நேற்று (23) ஆரம்பிக்கப்பட்டதுடன் இரவு 10.30 மணிக்கு பின்னர் இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது கட்சி காரியாலயத்தில் இருந்த பொருட்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment