Header Ads

STF முகாம் அருகில் இன்று இடம்பெற்ற மற்றொரு பாரிய விபத்து; மூன்று பேர் உயிரிழப்பு




புத்தளம் - அனுதராதபுரம் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 7 பேர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த வீதியில் பயணித்த வேன் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் இருந்த மரத்துடன் மோதுண்டே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் புத்தளம் வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.




Powered by Blogger.