140 பாடசாலைகளின் பெயர் மாற்றம்; குடும்பப் பெயர் வைக்கும் இ.தொ.கா
ஊவா மாகாணத்திலுள்ள 140 பாடசாலைகளின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளமை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ் பெயர்கள் வைக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில், ஊவா மாகாண முன்னாள் தமிழ் கல்வி அமைச்சர் செந்தில் தொண்டமான் இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அறிய கிடைக்கின்றது.
இந்த நிலையில், தமிழ் மொழியிலான பெயர்கள் வைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிலைப்படுத்தி, தமது குடும்ப பெயரையும் பதுளை மாவட்டத்திலுள்ள பாடசாலையொன்றுக்கு சூட்ட செந்தில் தொண்டமான் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதன்படி, பதுளை – பூணாகலை தமிழ் மகா வித்தியாலயம், பதுளை ஸ்ரீ சௌமியமூர்த்தி தொண்டமான் கல்லூரி என பெயர் மாற்றப்பட்டுள்ளது.
குடும்ப பெயரை, பாடசாலையின் பெயராக மாற்றும் நோக்குடனேயே பெரும்பாலான பாடசாலைகளின் பெயர்கள் மாற்றப்பட்டதாக ஊவா மாகாண மக்கள் ஏற்கனவே குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தனர்.
இந்த குற்றச்சாட்டுக்களை மறுத்த செந்தில் தொண்டமான், பூணாகலை பாடசாலைக்கு, ஸ்ரீசௌமியமூர்த்தி தொண்டமான் கல்லூரி என பெயர் மாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment