Header Ads

தேர்தல் முடிவுகளை வெளியிட தாமதம் ஆகலாம் காரணம் இதுதான்



 தேர்தலின் இறுதி முடிவுகளை நவம்பர் 18ஆம் திகதி நண்பகலுக்கு முன்னர் வெளியிட எதிர்பார்ப்பதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அந்த ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இம்முறை தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் வாக்குச்சீட்டு அதிக நீளமானது என்பதால், வாக்குகள் எண்ணும் பணிகளுக்கு அதிக நேரம் செல்லும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் உறுதிப்படுத்தப்படாத தேர்தல் தொடர்பான முடிவுகளை சமூக ஊடகங்கள் ஊடாக வெளியிடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, எதிர்காலத்தில் நடைபெறவுள்ள மாகாண சபை தேர்தலின்போது, குறைந்தது ஒரு மாகாணத்திலாவது இலத்திரனியல் வாக்களிக்கும் முறையை அறிமுகப்படுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்காக, இந்தியா மற்றும் மொரட்டுவை பல்கலைக்கழக்கத்தின் உதவியை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.