டார்லி வீதியில் உள்ள சுதந்திரக் கட்சியின் தலைமையகம் கைப்பற்றப்படும்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீட்டெடுக்கும் பணியின் முதல் கட்டமாக கொழும்பு டார்லி வீதியில் அமைந்துள்ள கட்சித் தலைமையகத்தை கைப்பற்றுவது என்று பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம கூறியுள்ளார்.
அது ஜனநாயக ரீதியான முறையிலேயே மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
பொதுஜன பெரமுன கட்சிக்கு ஆதரவு வழங்க எடுத்த தீர்மானமானது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை அழிவுக்குக் கொண்டுசெல்லும் சதித்திட்டம் என்று அவர் கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை மீண்டும் கட்டி எழுப்புவதற்காக தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுவதாக அவர் கூறியுள்ளார்.

Post a Comment