ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைப்பாளர்கள் 183 பேர் சஜித்துடன்?
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவை தோற்கடிப்பதற்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளர்கள் 183 பேர் தயாராக இருப்பதாக ஶ்ரீலங்கா சுதந்திர ஜனநாயக முன்னணி கூறியுள்ளது.
தற்போது ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி 03 பிரிவுகளாக பிளந்துள்ளதாக அந்த முன்னணியின் செயலாளர் ரஜிக கொடிதுவக்கு கூறியுள்ளார்.
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர்கள் பொதுஜன பெரமுனவுடன் இணைந்து கொண்டமையானது பதவிகளுக்கும் வரப்பிரசாதங்களுக்குமே என்று அவர் கூறியுள்ளார்.
எனினும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆதரவாளர்கள் ராஜபக்ஷக்களுக்கு விருப்பமில்லை என்றும் அவர்களை தோற்கடிக்க இவ்வாறு இணைந்து கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment