Header Ads

50 பிரதேச சபை உறுப்பினர்கள் சஜித்துடன் இணைவு






ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 50 உறுப்பினர்கள் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

கொழும்பு புதிய நகர மண்டபத்தில் நேற்று மாலை ஊடக சந்திப்பை நடத்தி சஜித் பிரேமதாசவுக்கான ஆதரவை அவர்கள் அறிவித்துள்ளனர்.

இந்த 50 உறுப்பினர்களும் கேகாலை மாவட்டத்தை சேர்ந்த பிரதேச சபைகளின் உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஊடக சந்திப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் எம். பிக்களான ரஞ்சித் மத்தும பண்டார, விஜித் விஜயமுனி சொய்சா, ரவி கருணாநாயக்க உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

No comments

Powered by Blogger.