மைத்திரிக்கு விஷேட சலுகைகள் - பல கோடி பெறுமதியான சொத்தை வழங்கவும் அனுமதி
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஓய்வு பெற்ற பின்னர் கொழும்பு 07, மகாகமசேகர மாவத்தையில் உள்ள நவீன வசதிகள் கொண்ட அவரது தற்போதைய இல்லத்தை அவருக்கே வழங்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
ஜனாதிபதியின் தலைமையில் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் நிதியமைச்சர் மங்கள சமரவீர சமர்ப்பித்த இது தொடர்பான பத்திரத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ஓய்வுபெற்ற ஜனாதிபதிக்கு வழங்கப்பட வேண்டிய அனைத்து அரசியலமைப்பு சலுகைகளுக்கும் மேலதிகமாக மைத்ரிபால சிறிசேனவினது பாதுகாப்பிற்காக விசேட அதிரடிப்படையை வழங்கவும் அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
இலங்கையில் போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதில் மைத்ரிபால சிறிசேன முக்கிய பங்கு வகித்துள்ளார் என்று கூறி இது வழங்கப்படவுள்ளது.
இதற்கிடையில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்காவுக்கும் விசேட அதிரடிப்படை பாதுகாப்பு வழங்கப்படவேண்டுமென வெளிவிவகார அமைச்சர் திலக் மாறப்பன இந்த அமைச்சரவையில் முன்மொழிந்துள்ளார்.
இதற்கு பதிலளித்த நிதியமைச்சர் மங்கள சமரவீர, போதைப்பொருளை ஒழிக்க பணியாற்றியதால் மைத்ரிபால சிறிசேனவுக்கு விசேட அதிரடிப்படை பாதுகாப்பு வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

Post a Comment