தமிழர்கள் கடந்த காலத்தை மறக்காவிட்டாலும் மன்னிக்க வேண்டும்
நெருங்கி வரும் இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் எந்த சர்வதேச தரப்பினரும் தலையிட முயற்சிக்க மாட்டார்கள் என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தேர்தலில் தமிழர்களின் வாக்குகள் மிக முக்கியமானவை .கடந்த காலங்களில் என்ன நடந்தது என்பதை தமிழர்களால் மறக்க முடியாது.
ஆனால் இரு சமூகத்தினரும் ஒருவருக்கொருவர் மன்னிக்க வேண்டும். நாட்டுக்கு புதிய அரசியலமைப்பு தேவையா என்பதை மக்கள் தீர்மானிக்கட்டும்.
எமது கட்சி அதிகபட்ச அதிகாரப் பகிர்வுக்கு உறுதிபூண்டுள்ளது. எங்கள் வேட்பாளர் அல்லது ஜனாதிபதி யார் என்பது முக்கியமல்ல, எங்கள் தலைவர் [மஹிந்த ராஜபக்ஷ] அரசாங்கத்தின் தலைவராக இருப்பார் [பிரதமராக].
எனவே, இந்த ஏற்பாடு எங்களுக்கு நன்றாக பொருந்துகிறது. அவர் எங்கள் தலைவர், அவர் நம் நாட்டின் ஆன்மீகத் தலைவர்.
இந்தியாவின் ‘ தி ஹிந்து’ பத்திரிகைக்கு பேட்டியளித்துள்ள அவர் இவ்வாறு கூறியுள்ளார்.” நெறிமுறைப்படி அது அப்படித்தான் இருக்க வேண்டும்

Post a Comment