பஸ் மற்றும் ரயில் கட்டணங்கள் 7 வீதத்தால் அதிகரிப்பு
பேருந்து, ரயில் கட்டணங்களை 7 வீதத்தால் அதிகரிக்க சிங்கப்பூர போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.
எனினும் குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு இந்த கட்டண உயர்வு பாதிப்பை ஏற்படுத்தாது என்று போக்குவரத்து அமைச்சு கூறியுள்ளது.
இவ்வாண்டின் பொதுப் போக்குவரத்து பற்றுச்சீட்டுத் திட்டத்திற்கு ஆதரவாகஇ பொதுப் போக்குவரத்து நிதியில் ஆறு மில்லியன் வெள்ளி பணம் போடுவதாக அரசாங்கம் அறிவித்திருப்பதால்இ குறைந்த வருமானக் குடும்பங்களுக்குக் கூடுதல் ஆதரவு கிடைக்கவிருக்கிறது.
பொதுப் போக்குவரத்து கட்டண உயர்வை வசதி குறைவான பயணிகள் சமாளிப்பதற்கு உதவுவது இதன் நோக்கம்.
இதன்வழிஇ கட்டண உயர்வுக்குப் பிறகும் இவர்களது சராசரி போக்குவரத்து கட்டணம் 2015ஆம் ஆண்டைவிடக் குறைவாக இருக்கும் என சிங்கப்பூர் போக்குவரத்து அமைச்சு கூறியது.

Post a Comment