Header Ads

ரணில் - சந்திரிக்கா இடையில் கலந்துரையாடல்

Image result for ranil chandrika

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆலோசகரான முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கும் இடையில் முக்கியமான பேச்சுவார்த்தை ஒன்று நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த சிலரது ஆதரவை புதிய ஜனநாயக முன்னணிக்கு பெற்றுக்கொள்வது தொடர்பாக இந்த பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

சந்திரிக்கா லண்டன் செல்லும் முன்னர் இந்த பேச்சுவார்த்தை நடந்துள்ளது.

தற்போது லண்டனில் இருக்கும் சந்திரிக்கா விரைவில் இலங்கை திரும்ப உள்ளதாகவும் இதன் பின்னர் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவளிப்பது தொடர்பான நடவடிக்கைகளை எடுப்பார் என கூறப்படுகிறது.

No comments

Powered by Blogger.