இறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்கள் எங்கே? சிரித்துக் கொண்டே பதிலளித்த கோட்டா
போரின்போது இராணுவத்திடம் சரணடைந்த பின்னர் காணாமல் போன நபர்கள் குறித்து விசாரித்தபோது, கோட்டாபய ராஜபக்ஷ சிரித்துக் கொண்டே, இராணுவத்தை வழிநடத்தியது நானல்ல என்று கூறியுள்ளார்.
இன்று (15) கொழும்பில் உள்ள ஷங்க்ரிலா
ஹோட்டலில் நடைபெற்ற சிறப்பு செய்தியாளர் சந்திப்பில், "த இந்து"
செய்தித்தாள் ஊடகவியலாளர் மீரா சீனிவாசன் கோட்டாபய ராஜபக்ஷவிடம் ,
"இராணுவத்தில் சரணடைந்த பின்னர் காணாமல் போனவர்கள் தொடர்பாக மக்கள் கேள்வி
எழுப்புகிறார்கள். . போரை வழிநடத்திய நபர் என்ற ரீதியில் நீங்கள் என்ன
சொல்கிறீர்கள்? என்று கேள்வி எழுப்பினார்.
கோட்டாபய ராஜபக்ஷ - "நீங்கள் சொல்வது தவறு. நான் இராணுவத்தை வழிநடத்தவில்லை என்று பதிலளித்ததுடன்,
ஊடகவியலாளர் - அப்படியானால் உங்கள் சகோதரரா?"
என கேட்டபோது,
கோட்டாபய ராஜபக்ஷ - இல்லை. இல்ல . இராணுவத்தை வழிநடத்துவது
இராணுவதளபதி ஹே ஹே..." என சிரித்து சிரித்து குறிப்பிட்டுள்ளார்.
இறுதி யுத்தத்தின்போது, விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளிகள் மற்றும்
தமிழ் மக்கள் மாத்திரமன்றி எமது இராணுவத்தினரும், பல அதிகாரிகளும்,
பாதுகாப்பு தரப்பினர் பலரும் காணாமல் போயிருக்கின்றார்கள். அவர்கள்
குறித்து ஏன் எவரும் கேள்வி எழுப்புவதில்லை என்று அவர் கூறியுள்ளார்.
இவ்வாறான நிலையில் என்னிடம் இந்த கேள்வியை கேட்பது உகந்ததா? என ஊடகவியலாளரிடம் கோத்தபாய கேள்வி எழுப்பியுள்ளார்.
Post a Comment