Header Ads

ஜனாதிபதி மைத்திரியின் ஆதரவு சஜித்துக்கு?


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவு ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு கிடைக்கும் என்று தான் நம்புவதாக அமைச்சர் மங்கள சமரவீர கூறியுள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி நிறுவுனர் பண்டாரநாயக்கவின் கொள்கைகள் தற்போது எஞ்சியிருப்பது ஐக்கிய தேசிய கட்யிடம் மாத்திரமே என்று அவர் கூறியுள்ளார்.

அதன் காரணமா அந்தக் கட்சியின் உண்மையான ஆதரவாளர்கள் ஐக்கிய தேசிய கட்சிக்கே ஆதரவு வழங்க வேண்டும் என்று அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

மாத்தறையில் உள்ள தனது இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இந்தக் கருத்தைக் கூறியுள்ளார்.

துமிந்த திசாநாயக்க, தயாசிறி ஜயசேகர ஆகியோர் எதிர்காலத்தில் அரசியல் அநாதையாவார்கள் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.


No comments

Powered by Blogger.