Header Ads

முரளி அல்ல விஜய் சேதுபதி வந்தாலும்​ தீர்மானிப்பது நீங்கள்

 

கதை ஒன்று கேள்விப்பட்டிருக்கிறோம் முன்னர் தேர்தல் காலத்தில் தோட்டத்தில் இடத்திற்கு இடம் பொக்கெட் மீட்டிங் என... நாய்களுக்கு பிஸ்கட் போடுவதை போல... தொண்டமான் மக்களுக்கு பணக்கட்டுகளை வீசுவார் என. 

மக்கள் சண்டையிட்டு ஒருவருடன் ஒருவர் மோதி பணத்தை பெற்றுக்கொள்வார்களாம். பின்னர் அவருக்கு வாக்களிப்பார்களாம்.
கதையின் உண்மை தன்மை எத்தகையதானாலும் மொட்டின் மேடையின் மேல் ஏறிய கேமராமேன் ஒருவரை தூக்கி வீசும் வீடியோவின் பின் தொண்டமான் என்பவர்  அத்தகைய ஒருவர் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. 

இருப்பினும் இம்முறை தொண்டமானின் ஆதரவு 2015ம் ஆண்டு போல ராஜபக்ஷர்களுக்கு கிடைக்கிறது. இருப்பினும் தோட்டத்தின் உண்மையான கதாபாத்திரமான  பழனி திகாம்பரமின் ஆதரவு கிடைப்பது சஜித்திற்கே.

2015ம் ஆண்டு ஆதரவளித்து 5 வருடங்கள் கடக்கும் நிலையில் திகாம்பரம் மூலம் தோட்ட மக்களுக்கு  சாதகமான மாற்றத்தை செய்துள்ளமை காணக்கூடியதாக உள்ளது. 

விசேடமாக இந்தியாவின் மூலம் இலங்கையின் வீட்டு பிரச்னையை தீர்ப்பதற்காக வழங்கிய டொலர் 300 மில்லியன் நிதி உதவியுடன் (கடனாக அல்ல.) தோட்டப்புற லயன் குடியிருப்புக்களில் வாழ்ந்த மக்களுக்கு 7 பேர்ச் காணியில் தனக்கான ஒரு வீட்டை நிர்மாணிப்பதற்கான பல திட்டங்களை மேற்கொள்ள முடிந்துள்ளது.

ஏற்கனவே ஆயிரக்கணக்கான வீடுகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. பல திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதேபோல், தோட்டங்களில் மக்களின் சம்பளத்தை உயர்த்துவதற்கான போராட்டத்தை ஆளும் கட்சி மேற்கொண்டது. 

தோட்டத்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்கவுடன்  சில மோதல்கள் இருந்தன. இறுதியில் தோட்ட தொழிலாளர்களின்  சம்பளத்தை ஓரளவிற்கு உயர்த்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.

2015ம் ஆண்டு நுவரெலியா மாவட்டத்தில் சிறிசேன அதிக வாக்குகளான 130,000 பெற்று வெற்றிபெறுவது இந்த நிலைமைகளுக்கும் முன்னதாகும். இந்த வெற்றியின் மிக முக்கியமான  காரணி பழனி திகாம்பரம்  ஆகும். 

இம்முறை தோட்டப்புறங்களில் இடம்பெறவுள்ள தேர்தல் பிரச்சாரத்திற்கு தொண்டமானின் ஆதரவிற்கு முத்தையா முரளிதரன் பங்குபற்ற உள்ளதாக நடைபெறும் கதைகளில் தெரிகிறது. 

முரளி அல்ல... மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வந்தாலும் இம்முறை நுவரெலியா மாவட்டத்தில் 150,000ற்கும் அதிகமான வாக்குகளை பெற்று பழனி அவரின் மாவட்டத்தில் சஜித்திற்கான வெற்றியை உருவாக்குவது உறுதி.

லங்கா நியூஸ் வெப்

No comments

Powered by Blogger.