Header Ads

ஐக்கிய தேசிய கட்சியின் மிக முக்கிய கூட்டம் இன்று



ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் தொடர்பாக தீர்க்கமான விசேட கூட்டமொன்று இன்று (15) நடைபெறவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

கட்சியின் பிரமுகர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் இதுவரை மேற்கொண்ட பிரச்சார நடவடிக்கைகளை குறித்து முழு ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதற்கிடையில் சபாநாயகர் மற்றும் பிரதமருக்கு இடையில் நேற்றய தினம் (14) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது பிரச்சார நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் எத்தகைய கோரிக்கைகள் பெருகினாலும், சபாநாயகர் பதவி ஒரு சுயாதீனமான பதவியாகும். அதன் கௌரவத்தை பாதுகாத்து தேர்தல் பிரச்சார மேடைகளில் பங்கு பற்றாமல் இருக்க தான் முடிவு செய்துள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய லங்கா நியூஸ் வெபிற்கு தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.