Header Ads

இறக்குமதி செய்யும் வெங்காயத்திற்கான விலை குறைப்பு

இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்றுக்கான இறக்குமதி வரி 39 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்துள்ளார்.

சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள காரணத்தினால் மக்கள் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுப்பதால் இந்த தீர்மானம் எடுக்கப்படுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பெரிய வெங்காய உற்பத்தியாளர்களை பாதுகாப்பதற்காக இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்திற்காக இறக்குமதி வரி 40 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டிருந்த போது இந்தியாவில் நிலவும் காலநிலையினால் வெங்காய இறக்குமதி தடைப்பட்டதை அடுத்து உள்நாட்டு வெங்காயத்திற்கான விலை 250 இல் இருந்து 300 ரூபா வரையில் அதிகரிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் நுகர்வோரின் நலன் கருதி இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்திற்கான வரியை 39 ரூபாவால் இன்று (01) நள்ளிரவு முதல் குறைப்பதற்கு வாழ்க்கை செலவு குழு தீர்மானித்துள்ளது.

விவசாயத்துயை அமைச்சின் அறிக்கையின் அடிப்படையில் உள்நாட்டு வெங்காயத்தில் 75% அறுவடை செய்யப்பட்டு விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இறக்குமதி குறைக்கப்படுவதை அடுத்து வெங்காயம் கிலோ ஒன்றின் விலை 50 இல் இருந்து 70 ரூபா வரையில் குறைக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.