Header Ads

நேற்று மஹிந்த கூறியது பொய்யா? அமைச்சரவை நீங்கிவிடுமா? விளக்கம் இதுதான்






புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டவுடன் அதுவரை இருந்த அமைச்சரவை இல்லாமல் ஆகிவிடும் என்றும், புதிய ஜனாதிபதியின் விருப்பப்படி புதிய அமைச்சரவை ஒன்றை அமைக்க முடியும் என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று (15) கூறியுள்ளார்.

நேற்று கொழும்பு சங்கரீலா ஹேட்டலில் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ உட்பட்டவர்களுடன் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறினார்.

எனினும் இந்தக் கருத்து உண்மைக்கு புறம்பானது என்று சட்ட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

அமைச்சரவை இல்லாமல் ஆவது பிரதமர் பதவி நீக்கப்பட்டாலோ அல்லது பதவி விலகனாலோ ஆகும் என்றும், பிரதமர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டாலும் அமைச்சரவை இல்லாமல் ஆகும் என்றும், 2005 ம் ஆண்டு இடம்பெற்றது இதுவே என்றும் தெரிவிக்கின்றனர்.

அதன்படி இம்முறை பிரதமர் தேர்தலில் போட்டியிடாமையால் புதிய ஜனாதிபதி பதவியேற்றாலம் அந்த அமைச்சரவை முன்னர் போன்றே செயலில் இருக்கும் என்றும் கூறுகின்றனர்.

அதேநேரம் பிரதமரை நீக்க வேண்டுமானால் பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்பட வேண்டும்.



No comments

Powered by Blogger.