தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி நற்செய்தி
தீபாவளியை முன்னிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு முற்பணம் வழங்கப்படவுள்ளது. தலா 15,000 ரூபாய் வீதம் ஒவ்வொரு தொழிலாளருக்கும் முற்பணமாக வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தேயிலை சபையூடாக இந்த முற்பணம் வழங்கப்படுமென, மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள், சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
மேலும் கம்பனிகள் மூலமாகவும் தொழிலாளர்களுக்குப் பத்தாயிரம் ரூபாய் வழங்கப்படவுள்ளது.
இதனால், இம்முறை தீபாவளியை கொண்டாடவுள்ள தோட்டத்தொழிலாளர்கள் முற்பணமாக 15000 ரூபா பெறுவரென அமைச்சர் திகாம்பரம் மேலும் தெரிவித்தார்.

Post a Comment