தபால் மூல வாக்காளர்களுக்கான முக்கிய செய்தி
ஜனாதிபதி தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்தற்கான வாக்காளர் அட்டைகள் எதிர்வரும் 18 ஆம் திகதி தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் திட்டப் பணிப்பாளர் சன்ன பி.டி.சில்வா தெரிவித்தார்.
தபால் மூலம் வாக்களிப்பதற்காக 7 இலட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
தபால் மூலம் வாக்களிப்பதற்காக விண்ணப்பித்தவர்கள் தமது வாக்குகளை இம் மாதம் 31 ஆம் திகதியும், நவம்பர் மாதம் 1 ஆம் திகதியும் வாக்களிக்க முடியும்.
குறிப்பிட்ட இரண்டு தினங்களில் வாக்களிக்க முடியாதோர் நவம்பர் மாதம் 7 ஆம் திகதி அருகில் உள்ள தேர்தல் தெரிவு அத்தாட்சி அலுவலகத்தில் வாக்களிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
தேர்தல் ஆணைக்குழுவை சேர்ந்த ஊழியர்கள் 4 ஆம் திகதி தபால் மூலம் வாக்களிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

Post a Comment