Header Ads

இந்து நாகரீகம் கற்பிப்பதை யாரும் பேசுவதில்லை; இஸ்லாமிய நாகரீகம் கற்பிப்தையே பேசுகின்றனர்




விடுதலைப் புலிகள் எதை ஆரம்பித்து போராட்டம் நடாத்தினார்களோ அதே பதின்மூன்று அம்சங்க கோரிக்கைகளையும் மீண்டும் தங்களது தீர்மானம் என்று யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் மூலம் தமிழ் தலைமைகள் கொண்டு வந்துள்ளனர் என முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனரும், ஜனாதிபதி வேட்பாளருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா தொகுதிக்கான தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஓட்டமாவடி மீராவோடை அந்நூர் மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை இரவு நடைபெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்-

தற்போது ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தமிழ் தலைமைகள் இன்னும் முடிவு செய்யவில்லை. மகிந்த ராஜபக்ஷ, கோட்டபாய ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச, மங்கள சமரவீர ஆகியோரும் பேசுகின்றனர். யார் மூலம் ஜனாதிபதி தேர்தலை பயன்படுத்தி பேச முடியும், தங்களது பிரச்சினைக்கு தீர்வு வேண்டும் என்று செல்கின்றார்கள்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் மொத்த கட்சி தலைவர்களையும் ஓரே மேசையில் கொண்டு வந்து பதின்மூன்று அம்சங்க கோரிக்கைகளில் கையொப்பம் இட வைத்துள்ளனர்.

இந்த கோரிக்கைகளில் உங்களால் எதை செய்ய முடியும் என்று பேச்சுவார்த்தை இடம்பெறுகின்றது.

ஆனால் நாடு முழுவதும் பறந்து வாழும் முஸ்லிம் சமூகம் இதனை விட பல பிரச்சனைகளுக்கு முகம்கொடுத்து வருகின்றோம். தமிழ் மக்களது பிரச்சினை வடகிழக்கு மாத்திரம் தான். யாழ்ப்பாணத்தில் உள்ளவர்களுக்கு தேச வழமைச் சட்டம் உள்ளது.

இவர்களது திருமணம், சொத்துக்கள் உட்பட பல விடயங்களை பார்ப்பதற்கு இந்த சட்டம் உள்ளது. சமூகம் சார் சட்டம், இடம்சார் சட்டம் என்று சொல்லுவார்கள். முஸ்லிம்கள் எங்கு வாழ்ந்தாலும் அவர்களுக்கு சரியா சட்டம். யாழ்ப்பாணத்தில் உள்ளவர்களுக்கு தேச வழமைச் சட்டம்.

இந்து நாகரீகம் கற்பிப்பதை யாரும் பேசுவதில்லை, ஆனால் இஸ்லாமிய நாகரீகம், இஸ்லாமிய அரபு கற்பித்ததை பேசுகின்றனர். நாங்கள் பல பிரச்சனைகளோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றறோம்.

சஜித் பிரேமதாச ஜனாதிபதி வேட்பாளராக வந்தால் முஸ்லிம் பிரச்சனை தீர்ந்து விடும் என்றால் பிரச்சனை இல்லை. கோட்டபாய ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராக வந்தால் முஸ்லிம் பிரச்சனை தீர்ந்து விடும் என்றால் பிரச்சனை இல்லை. ஆனால் பதின்மூன்று இலட்சம் வாக்குகள் வழங்கி பெற்ற மைத்திரிபால சிறிசேனவால் எங்களது பிரச்சனைகளை தீர்க்க முடியவில்லை.



குகதர்ஷன்
Powered by Blogger.