சஜித்தின் அரசாங்கத்தில் மங்கள பிரதமர் - ரணில் நீக்கம்?
சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் அமைச்சுப் பங்கீடு தொடர்பில் இன்றைய நாட்களில் பெயரிடப்பட்டுக் கொண்டிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன கூறியுள்ளார்.
அந்த அரசாங்கத்தில் பிரதமர் பதவிக்கு ரணில் விக்ரமசிங்கவின் பெயர் வெட்டப்பட்டு அமைச்சர் மங்கள சமரவீர பெயரிடப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
குருணாகல் பிரதேசத்தில் இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அதேநேரம் ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருக்கும் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசமின் பெயரை வெட்டிவிட்டு அந்த இடத்திற்கு மீண்டும் திஸ்ஸ அத்தனாயக்கவை நியமிக்க சஜித்வாதிகள் திட்டமிடுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

Post a Comment