கோட்டாபய ராஜபக்ஷ கூறுகிறார் ஊழலை முற்றாக ஒழிப்பதாக
நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் இந்த நாட்டில் ஊழலை முற்றாக இல்லாதொழிப்பதாக பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார்.
நேற்று றம்புக்கனை பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
நாங்கள் இன்று முன்நிற்பது அன்று தடைப்பட்ட அபிவிருத்திப் பணிகளை தொடர்ந்து முன்னெடுத்துச் சென்று நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு தௌிவான வேலைத் திட்டங்களுடன் பணியாற்றக் கூடிய குழுவினருடன் என்று அவர் கூறுகின்றார்.
ஊழல் மற்றும் விரயம் சுதந்திரத்திற்கு பின்னர் வந்த அனைத்து அரசாங்கங்களிலும் இருந்தது. எனினும் தற்போதைய அரசாங்கத்தில் அது மேலாங்கிக் கிடப்பதாக அவர் கூறியுள்ளார்.
எந்தத் தடை வந்தாலும் நாட்டில் ஊழலை இல்லாதொழிப்பதாக அவர் கூறியுள்ளார்.
கேட்டாபய ராஜபக்ஷ ஊழலை ஒழிப்பதாக கூறுவது 2005 - 2014 காலத்தில் பாரிய அளவில் ஊழல் குற்றம் சுமத்தப்பட்ட குழுவினரை அருகில் வைத்துக் கொண்டும், ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு பாரிய அளவில் ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள நிலையிலுமே..
Post a Comment